Wednesday, January 21, 2015

பிரயாகையின் கதை



ஜெ

வெண்முரசு பிரயாகை முடியும்போது நாவலை இப்படித் தொகுத்துக்கொள்கிறேன்

1. கங்கை பிறக்கிறாள். அவள் நீரின் கொந்தளிப்பாக இருக்கிறாள். ஆனால் கொந்தளிக்கும் தனக்குள் மாறாத துருவனை அவள் வைத்திருக்கிறாள்

2 துரோணர் துருபதனை பழிவாங்குகிறார். துருபதனை அர்ஜுனன் அவமதிக்கிறான்

3 அர்ஜுனன் தன் மனசை நிறைத்திருந்த குருநாதனை இழக்கிறான்/ காமத்தில் விழுகிறான். புதிய குருவுக்காகத் தேடுகிறான்

4 துருபதன் அவமானத்தால் மனநோயாளி ஆகிறான். அவனால் மறக்க முடியவில்லை. வேள்வி செய்து ஒரு மகளை பெறுகிறான். அவள் அஸ்தினபுரியின் அழிவுசக்தி என்கிறார்கள்

5  மணிமுடியை தருமனுக்குக் கொடுக்க திருதராஷ்டிரர் முடிவுசெய்கிறார். மனமுடைந்து திரும்பச்செல்லும் சகுனி புதியவேகத்துடன் திரும்ப வருகிறார்

6 தருமன் முடிசூட்டப்படுகிறான். கௌரவர் குமுறுகிறார்கள்.

7 கிருஷ்ணன் வருகிறான். அஸ்தினபுரியை உபயோகித்து மதுராவை மீட்கிறான் .திருதராஷ்டிரன் மனக்கசப்படைகிறான்

8  அதைப்பயன்படுத்தி அவர்களை அரக்குமாளிகைக்கு அனுப்பி எரியூட்டுகிறார்கள்

9 அவர்கள் தப்பி இடும்பவனம் சென்று இடும்பியை மணக்கிறார்கள்.

10 அதுவரை இருந்த அனைவரிலும் வனவாசம் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணுகிறது

11 பாஞ்சாலியின் குணாதிசயம். அவள் ஐந்துமுகம் கொண்ட கொற்றவை.

12 பாஞ்சாலியின் சுயம்வரத்தில் அர்ஜுனன் வெல்கிறான். திருமணம்

இவ்வளவுதூரம் கதை நகர்ந்துவந்திருக்கிறது. அதுவும் 3 மாதங்களில். பழைய விஷயமெல்லாம் நினைத்துப்பார்க்கவே ரொம்ப தூரத்திலே இருக்கிறது

சண்முகம்