ஜெ
பிரயாகை முடிவுற்றதாகவே தோன்றவில்லை. ஏனென்றால் அதில் இதேபோல பல உச்சங்கள் வந்துசென்றுவிட்டன. பல தனிக்கதைகளின் தொகுப்பாகவே அது உள்ளது. அடுத்தநாவல் பிரயாகையின் தொடர்ச்சியாக அமையும் என்று நினைக்கிறேன்
பிரயாகையில் பாண்டவர்கள் ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் துலங்கின்வந்திருந்தது. அர்ஜுனன் பெண்பித்தன். ஆனால் அவனுடைய பெண்பித்து மனக்கசப்பிலே வேரூன்றியது. அதை அந்தக் குளியலறை சேவகன் துல்லியமாக சொல்லிவிட்டான்
அதேபோல பீமன் .அவனுடைய மனக்கசப்பை அந்த சத்திரத்துச் சமயலை உண்ணும் காட்சி சொல்லிவிட்டது. குப்பையைக்கூட அவர்களுடன் அமர்ந்து உண்ணுகிறான். அந்த மனநிலையை ஒரு அவுட்சைடர் மனநிலை என்று சொல்லலாம். ஆக்வேதான் அவனால் இயல்பாக இடும்பியிடம் இருக்கமுடிந்தது. அங்கே காட்டில் அவன் அடைந்த அந்த விடுதலையே அவ்வாறு அவனுக்கு வருவதுதான்
குந்தியின் கதாபாத்திரமும் தெளிவாகியிருக்கிறது. ஒரு கன்னி விதவையின் வாழ்க்கைதானே அவளுடையது. அவளுடைய செக்ஷுவல் டிப்ரசன் பல வார்த்தைகலில் சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் அவள் கனிந்து ஒரு பாட்டியாகி கடோத்கஜனின் தோளில் இருக்கிராள்
தெளிவாக அமையாத கதாபாத்திரம் என்றால் தருமன்தான். அவனை மற்றவர்கள் பார்க்கும் கோணம்தான் அடிக்கடி வருகிறது
சிவக்குமார்