Friday, January 23, 2015

நெருப்பில் நுழைதல்



அன்பிற்குரிய ஜெ,

       பிரயாகையின் முடிவில் வெறுமை என்னை ஆட்கொண்டது.நேற்று முழுவதுமே மனதில் பாஞ்சாலியே நிறைந்திருந்தாள்.எத்தனை நுணுக்கமான முடிவு.நீரில் துவங்கிய அவளின் வளர்ச்சி நெருப்பில் நுழைகிறது.

    எனக்கு அவள் பல்லாயிரம் பெண்களின் வடிவாகவேத் தோன்றுகிறாள்.ஒவ்வொரு பெண்ணுமே வாழ்வில் இப்படித்தானே அழகாய்த் தோன்றி ஊரும்,உறவும் மெச்ச,பெற்றோர் உச்சி முகர வளர்ந்து,மலர்ந்து வாழ்வின் பெருங்கனவுகளுடன் நெருப்பெனும் நதியில் நுழைகிறார்கள்.அதுவே வாழ்வின் மறுக்க இயலா உண்மை.

      இந்தியப் பெண்களின் பிம்பமாக சீதையும்,பாஞசாலியும் எப்பொழுதும் ஒப்பிடப்படுபவர்கள்.சீதை வாழ்வின் இறுதியில் அக்னிப்பிரவேசம் செய்தாள்.பாஞ்சாலியின் வாழ்வையே குருதியும்,தீயுமாகச் சித்தரித்து அவளை நெருப்பில் நடந்து வரச் செய்துள்ளீர்கள்.இனி அவள் ஐவரும் இணையும் பிரயாகயாக பாரதத்தையேத் தாங்கப் போகிறாள்.

    பிரயாகையின் எழுத்திலிருந்து இன்னும் மீளவில்லை.
நன்றி

மோனிகா மாறன்.