பிரயாகை நமது இன்றைய நடைமுறை வாழ்ககைக்கு மிகவும் நெருக்கமானதென்று தோன்றுகிறது. மனித உணர்வுகள் எல்லா நாவல்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. அதே போல் தான் இந்த நாவலிலும். உணர்வுகள் இன்னும் துள்ளியமாகவே எழுதப்பட்டிருக்கிறது. அதே போல் அரசியல் நிகழ்வுகளும் எழுதப்பட்டிருந்தது. அவை இன்றைய உலக அரசியலை பிரதிபலிப்பதாக இருந்தது.
பிரயாகையில் திரும்ப திரும்ப எழுதப்பட்டிருந்தது பொது மக்களின் மன நிலை. சரியாக சொன்னால் பொது மக்களின் சிறுமை என்று தான் சொல்ல வேண்டும். அவை பல் வேறு கதாப்பாத்தரங்களின் கோணங்களிலும், சில நேரம் ஆசிரியரின் கோணத்திலிருந்தும் எழுதப்பட்டிருக்கிறது. குந்தி, சகுனி, விதுரர், பீஷ்மர் என்று முக்கிய கதாப்பாத்திரங்கள் மக்களை பற்றி பேசுகிறார்கள். இவர்கள் எல்லாரும் அரசு சூழ்பவர்கள் இவர்களின் பார்வையீல் மக்கள் எப்படி தெரிகிறார்கள் என்று விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
மக்களின் இச்சைகள், எதிர்பார்ப்புகள் அனைத்துமே பெரும்பாலும் ஒரு எதிர் மறை கோணத்தில் தான் சொல்லப்பட்டிருக்கிறது. மக்களின் இந்த மன நிலையை கூறுவதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது? அரசு சூழ்பவர்கள் பொது மக்கள் மேல் கொள்ளும் வெறுப்பு, அவர்களுக்கு அரசியலை பற்றி தெரியாது நெறி அறிந்த அமைச்சர்களுக்கு மட்டுமே தெரியும் என்ற எண்ணம், இப்படி பட்ட மன நிலைகள் தான் ஷத்ரியர்களை மக்கள் மேல் கவலையில்லாமல் தன் பேராசைக்காக போர்களை நடத்த தூண்டுகிறதா? இல்லை பாரதவர்ஷத்தில் ஏற்படயிருக்கும் பெரும் போருக்கு ஆரசர்கள் மட்டுமில்லாமல் மக்களின் மனமும் ஷத்ரியர்கள் யாதவர்கள் என்று பிளவுபட்டு ஒரு பெரும் போரை எதிர் நோக்குவதை குறிக்கிறதா?
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மூத்தவர்கள் மக்கள் மேல் ஒரு எதிர்மறை மன நிலையுடன் இருக்கிறார்கள். இளையவர்கள் மக்களின் அறவுணர்வின் மேல் சிறிது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தருமனிடமும், அர்ஜுனனிடமும் இது தெளிவாகவே தெரிகிறது. பீமன் சொல்வதில்லை என்றாலும் அவன் மக்களில் ஒருவனாகவே இருக்கிறான். கிருஷ்ணன் அனைவருக்கும் தோழனாக இருக்கிறான்.
மக்கள் மீதான இந்த வேறுபட்ட பார்வை வரப்போகும் கதையில் முக்கியத்துவம் வகிக்குமா?
ஹரீஷ்
வெண்முரசு குழுமத்தில் விவாதிக்க