Wednesday, January 21, 2015

கிருஷ்ணலீலை



பிரயாகையில் வரும் கிருஷ்ணனின் செயல்களில் இரண்டுவிதமான அணுகுமுறையை அவதானித்தேன்.ஒன்று, அவன் எதை செய்தாலும் அந்த செயலுக்குட்பட்ட பொருள்களின் இயல்பை அறிந்து செயல்படுகிறான். இயல்பை பொருத்து அவனுடைய செயல்களை முடிவு செய்கிறான். கங்கையில் அதி வேகத்தில் படகுகளை இயக்குவதிலிருந்து, அரசியல் உரையாடல் வரை.

ஒரு பொருளின் தன்மை என்ன என்று அறிவது அறிவியல். அந்த தன்மையை நம் தேவைக்கு எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என்று பார்ப்பது தொழில் நுட்பம். இவை இரண்டையும் கிருஷ்ணனிடம் பார்க்க முடிகிறது. அவன் வஜ்ர முகி குருவி பிரச்சனையை தீர்த்தது அதன் இயல்பறிந்து தான்.மனிதர்களையும் அதே போல் இயல்பறிந்து எதிர்கொள்கிறான். அவர்களின் அந்தரங்கம், ஆசைகள், அச்சங்களை அறிந்து அவன் அவர்களுடன் உரையாற்றுகிறான்.

இரண்டாவது, ஒரு செயலுக்கு பல தரப்பிலிருந்து வலு சேரத்து கொண்டு ஒரே நேரத்தில் எல்லா தரப்பிலிருந்தும் தாக்கி வெற்றியடைகிறான். உரையாடலிலும் சரி, போரிலும் சரி. குந்தியிடம் படை கோரி வரும் போது அவளிடம் முதலில் பாரத வர்ஷத்து சக்ரவர்த்தினியாக ஆசைபடும் அரசி என்ற முறையில் பேசுகிறான். அதன் பின் யாதவ குலத்து பெண் என்ற முறையில் பேசுகிறான். அதன் பின் தன் அத்தை என்ற முறையில் பேசுகிறான். மேலும் பெண் என்ற முறையிலும் பேசுகிறான். படையை பெருவதில் வெற்றி கொள்கிறான்.

அதே போல் படை நகர்வை தடுக்க வரும் விதுரரை, அவர் சூதன் - அதை மறைக்க அவர் போடும் வேஷத்தை, அவரது ஆணவத்தை தாக்குகிறான். அதன் பின் அவரது அந்தரங்க பயமான கணிகரை சொல்லி பயமுறுத்துகிறான். பின் அவரது உறவுகளை சொல்லி பயமுறுத்துகிறான். ஒரு நிமிட நேர பேச்சு தான் பாரதத்தின் சிறந்த மதியூகி சரணடைகிறார்.

ஹரீஷ்

குழுமத்தில்