Saturday, January 24, 2015

இந்திரநகர்



[இந்திரப்பிரஸ்தம்  by_kupbot/ பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்]

இனிய ஜெயம்,

நினைக்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது. புதிய களம், புதிய சவால். நான் கேட்ட செவிவழிக் கதைகளில்  தேவர் உலகை சேர்ந்த சிற்பி மயன் வடிவமைத்த நகரம் இந்திரபிரஸ்தம் . மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் என விரியும்.

சமீபத்தில் புதுவை நகரம் வடிவமைத்து நிர்மானிக்கப்பட்ட விதம் பற்றி கட்டிடக் கலை வல்லுன நண்பர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். சாக்கடை வழி முதல், போர் எனில் ராணுவம் நகர என அனைத்தும் எப்படி கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு , அதன் மேல் நகரம் கட்டி எழுப்பப்பட்டது என விவரித்தார். கேட்கும்போதே மனதில் வித விதமான சித்திரங்கள் எழுந்தன.

பிரயாகையில் கூட கிருஷ்ணன் துவாரகை எனும் நகரை எப்படி வடிவமைக்கப் போகிறான் என்று  வாய்மொழியாக சிறு சித்திரம் ஒன்று வருகிறது.

ஹஸ்தினாபுரியில் இருந்து பிரிந்து, எதிர்கால சாத்தியங்களை கணக்கில் கொண்டு உருவாகப்போகும் நகரம் இந்தரப்பிரஸ்தம். கல் கல்லாக இந்த நகரத்தை சொல் சொல்லாக கட்டி எழுப்பப் போகிறீர்கள்.

வெண் முகில் நகரை கட்டி எழுப்பப் போகும்  எழுத்து மயனுக்கு வாழ்த்துக்கள்.

சீனு கடலூர்