ஜெமோ சார்
இப்போதுதான் வெண்முரசின் பிரயாகையை வாசித்து முடித்தேன். பெரிய மனச்சுமையை அளித்தது. ஒரு அற்புதமான வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற எண்ணம். உடனே மீண்டும்தொடங்கிவிடுமே என்ற ஆறுதலையும் அடைந்தேன்
நாவல் முடியும்போது வந்த கதை எனக்கு பலநினைவுகளை கொண்டுவந்தது. இந்தக் கதை எங்கோ சென்று தொடுகிறதே என்று நினைத்துக்கொண்டேன். எங்கே என்று நினைத்தபோதுதான் நினைவுவந்தது பிரயாகையிலே வரும் தபதியின் கதை
தபதி என்ற தீமகளைப்பற்றிய சித்தரிப்பு அபாரமானது. அவளை தீயை அணைந்து அன்னையாக ஆக்க தேவையாக இருந்த சிக்கல்களை வாசிக்கும்போது அவளும் பாஞ்சாலியும் ஒன்றுதான் என்று தோன்றியது
எப்படி பலகதைகளைக்கொண்டு வடிவம் பிசகாமல் ஒரே இழையாக இது கட்டப்பட்டிருக்கிறது என்று நினைத்தபோது ஆச்சரியமாக இருந்தது
சுதாகர்