Saturday, January 24, 2015

துருபதனின் மகள்



ஜெ

துருபதனின் அவமதிப்பு, அதன்பிறகு அவன் கொள்ளும் பெரும் துக்கம் ஆகியவற்றை பிரயாகையில் ஆரம்பம் முதலே வாசித்தபோது அவை இத்தனை உக்கிரமாக ஏன் இருக்கின்றன என்று தோன்றியது. அதாவது அவை கன்வின்சிங் ஆக இருக்கும்போதே ஏன் இந்த அளவுக்கு இந்த நாவலிலே வருகின்றன என்ற எண்ணம் வந்தது.

அதிலும் துருபதன் அவமதிப்பால் சாகும் நிலையை அடைவது அதன்பிறகு மீள்வது அவனுடைய மனச்சிக்கல் எல்லாமே கொடூரமான அளவுக்கு இருந்தன. அவன் கழுதைமேல் ஒன்றுக்கடித்தபடியே செல்வதை கண்டபோது நான் கண்ணீர் மல்கியிருக்கிறேன்

அதன்பின் அவன் அந்த பெரிய வஞ்சத்தால் இவளைப்பெற்றான். அப்படிப்பட்டவன் எப்படி மகளை அர்ஜுனனுக்கே கொடுத்தான்? அங்குள்ள முறை ஒருகாரணம். அவளைப்பற்றி அவனுக்குத் தெரியும் என்பது இன்னொருகாரணம்

அவளை கொடுக்கப்பது அவளை அவனுக்கு அடிமையாகக் கொடுப்பது கிடையாது. அவள் காலடியிலே அவனை போடுவதுதான். அவளுக்கு அஸ்தினபிரி அடிமையாவதுதான் அதுதான் அவனுடைய  பழிவாங்கல்

அத்தனைசித்திரம் தீவடிவமாக அவள் வந்ததுமே மாறிவிட்டது. அவளைப்போல ஒருத்தியைச் சொல்வதற்கு இத்தனை உக்கிரம் தேவைதான். கடைசியில் அவளுடைய பிம்பம் பெரிய தீ போல எழுவதை பார்க்கும்போது ஆரம்பத்திலே அந்த சித்திரமும் தேவை என்றே பட்டது

சாரங்கன்