அன்புள்ள ஜெயமோகன்
சிறப்பான முடிவு. கங்காளி அன்னை நிறைவுடன் சிரித்திருப்பாள்
இதுவரை எவரும் ஐந்துபேரை மணந்த பாஞ்சாலியின் அகத்தையும் உணர்ச்சிகளையும் இவ்வளவு துல்லியமாகச் சித்தரித்ததில்லை என்று நினைக்கிறேன். மிகமிகப் புறவயமான ஆராய்ச்சி. கர்ணன் அர்ஜுனன் பீமன் தருமன் மற்றும் துரியோதனனை அவள் எதிர்கொள்வது நுட்பமாக உள்ளது. அவளுடைய மாமியான குந்தியைப்போலவே அவளுக்கும் பாரதவர்ஷத்தை ஆளவேண்டும் என்ற கனவு உள்ளூர உள்ளது
நடைமுறை மனம் கொண்ட திரௌபதிக்கு வாழ்த்துக்கள். அவள் உணர்ச்சிகளுக்கு செவிகொடுப்பதில்லை. அவள் அஸ்தினாபுரியின் வரலாற்றையே மாற்றப்போகிறாள் என்பது தெரிகிறது. வெண்முரசின் மண்முடியில் ஒரு வைரம். சித்திரங்களும் மறக்கமுடியாதவை
ஷோபனா அய்யங்கார்