இது ஒர் இரவு முழுக்க வடதுருவத்தை expose செய்து எடுக்க்ப்பட்ட படம். மையத்தில் உள்ளது துருவ நட்சத்திரம். வட மீண். நிலைபெயராதது. வட வானில் உள்ள மற்ற அனைத்து வின்மீண்களும் அந்த மையத்தை 180 டிகிரி சுழல்கின்றன. தினமும்.
உண்மையில் வானில் இப்படி ஒரு நிலைபெயராத மீணைக் கண்டது மானுடனுக்கு எத்தனை நம்பிக்கை அளித்திருக்கும் ! உள்ளும் புறமும் தொலைந்த ஆன்மாக்களின் திசை அது. வானியல் சாஸ்திரம் கணிதங்கள் பிறந்து வந்திருக்கும். இல்லை அறத்தின் ஊற்றுக்கண் கூட அதில் உள்ளதா? துருவனின் நிலைபெயராமை பிரயாகையின் பாத்திரங்களில் எப்படி பொருள் கொள்கின்றன என்று இன்னொரு முறை வாசித்தால்தான் எனக்குப் பிடிபடும்.
ராஜா