Wednesday, January 21, 2015

அனலரசி


https://www.youtube.com/watch?v=-1hfG49HhOI

ஜெ

இதுவரை வந்த நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலே முடிகின்றன. முதற்கனல் ஒரு பெரிய தொடக்கத்தைச் சுட்டிக்காட்டி முடிந்தது. அதன்பிறகு மூன்றுநாவல்களுமே தன்னளவில் முழுமை கொண்டன. இந்த பிரயாகைதான் மறுபடியும் ஒரு தொடக்கத்தைக் காட்டி முடிகிறது

காட்டுத்தீ என்று திரௌபதியைச் சொல்லலாம். நாவல் முழுக்க வந்துகொண்டே இருக்கும் தீ அவள்தான். பிரயாகை கங்கையில் இருந்து தொடங்கினாலும் கங்கை மிகவும் அடங்கியே இருந்தது. முக்கியமாக வந்ததெல்லாம் தீதான். ஆரம்பத்திலிருந்தே தீ வந்துகொண்டிருந்ததை நினைத்துக்கொண்டேன்

துருபதனின் ஆன்மாவிலே எரிந்த தீயை இவள் பாரதவர்ஷம் முழுக்க பற்றவைக்கப்போகிராள். மனிதர்கள் வெறும் தவளைக்குஞ்சுகள். தன்னுடைய இலட்சியத்துக்காக காட்டை எரியூட்டிக்கொண்டு கடந்துசெல்கிறாள்

நிர்வாணமாக தீ நடுவே ஒரு தீ போல அவள் போகும் காட்சியை இன்றைக்கு கனவிலும் காண்பேன் என்று நினைக்கிரேன்

ஜெயராமன்: