Saturday, January 24, 2015

துருபதனும் அர்ஜுனனும்



அவமானத்தின் உச்சத்தை அனுபவித்தவன் அரசன் துருபதன். குரு துரோனரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தட்சிணையாக துருபதனை தேர் காலில் கட்டி இழுத்து வருகிறான் அர்ஜுனன். எவர் சொல்லையும் கேளாமல் அச்செயலின் குரூரத்தின் பிறரின் பதற்றத்தையும் பொருட்படுத்தாமல் நிமிர்ந்த தலையுடன் எவ்வித இரக்கமும் இல்லாமல் ஒரு அரசனை ஆடைகள் கிழிய அடித்து துவைத்து தேர்காலில் கட்டி இழுத்து வந்து போட்டவன் அர்ஜுனன். ஏவியது துரோனரே என்றாலும் செய்ல்படுத்தியது அர்ஜுனன். அவ்வாறிருக்க துருபதன் எவ்வாறு இச்செயலை செய்த ஒருவனுக்கு தன் மகளை மணமுடிக்க மனம் வந்தது. அர்ஜுனன் நகரில் வந்தது தெரிந்தபோதும் எவ்வித வெறுப்புணர்ச்சி இல்லாமல் எப்படி துருபதன் இருந்தார். அர்ஜுனனை அவர் மன்னித்து விட்டாரா? அப்படி கதையோட்டத்தில் எங்கேனும் வருகிறதா? நான் தவற விட்டேனா? இது என் மனதை குடைந்து கொண்டிருக்கிறது. எப்படி துருபதன் அர்ஜுனனுக்கு?

பிரேம் குமார்

குழுமத்தில்