Sunday, January 25, 2015

ரா.ஸ்ரீ.தேசிகன்



அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் என்னை வியப்புக்குள்ளாக்குகிறீர்கள். எழுத்தை ஒரு விரதமென கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்

வடகிழக்கு செல்வதாகச் சொன்னீர்கள். எங்கே? சிக்கிமா? பயணக்கட்டுரைகளை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன்

தொலைக்காட்சியில் இப்போதுதான் வெண்முரசு நிகழ்ச்சியின் தொகுப்பைப் பார்த்தேன். அழகான நிகழ்ச்சி. பதிவேற்றியதற்கு நன்றி

நீங்கள் உங்கள் உரையில் பேராசிரியர் ரா.ஸ்ரீ.தேசிகனைப்பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அவர் என்னுடைய தந்தையின் மாமா. எனக்கு இலக்கிய ஆர்வம் என் தந்தை தாய் இருவர் வழியாக வந்தது என்று நினைக்கிறேன்

ஏராளமான நூல்கள் வாசிப்பதற்கு. ஏராளமான இடம் பயணம் செய்வதற்கு. ஏராளமாக இருக்கிறது கற்பதற்கு. கடவுளுக்கு நன்றி. நம்மைச்சுற்றி உள்ள இயற்கை ஒருபக்கம் நிலையாமையை சுட்டிப் புன்னகைசெய்கிறது. மறுமக்கம் ஒரே வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான வாழ்க்கையை வாழும்படி அறைகூவுகிறது

அதனால்தான் எனக்கு மகாபாரதம் பிடித்திருக்கிறதோ என்னவோ
அன்புடன்

ஷோபனா அய்யங்கார்