நீங்கள் த்ரௌபதி ஐவரை மணம் செய்யும் காரணங்களையும் யாதவ-ஷத்ரிய போரட்டங்களையும் விளக்கும் இடங்கள் அருமையாகவும் புதிதாகவும் தர்க்கரீதியாகவும் அமைந்துள்ளது. இதை நீங்களே யுகித்தீர்களா அல்லது பல ஆண்டுகள் பலருடன் விவாதித்து இந்த முடிவுக்கு வந்தீர்களா.நான் நிறைய கற்று கொள்கிறேன்.
எனக்கு பிறரை போல் உளபூர்வமாக படித்து அனுபவித்து கடிதம் எழுத தெரியவில்லை ஆனால் நான் உங்கள் மூலமாக நிறைய புது புது தகவல்களை தெரிந்து கொள்கிறேன்.நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்று தெரிகிறது.ஒரு கடிதம் எழுத அவ்வளவு சிரமப்பட வேண்டி இருக்கிறது நீங்கள் எப்படி தான் தினம் ஒரு அத்யாயம் மற்றும் வேறு கட்டுரைகள் பத்திகள் பதில்கள் இடையில் சினிமா நாவல்கள் அப்பப்பா ஒரு 30 வருடம் வேண்டியவற்றை படித்து விட்டீர்கள் போல இன்னும் ஒரு 30 வருடம் எழுத உங்களிடம் சரக்கு இருக்கும் என்று நினைக்கிறன்.இப்பொது நீங்கள் பயணம் செய்து புது புது மனிதர்களை பார்த்து விவாதம் செய்தாலே போதும் என்று நினைக்கிறன் கருக்கள் வந்து கொண்டே இருக்கும்.நான் எவ்வளவு தூரம் உங்களை பின்தொடர முடியும் என்று தெரியவில்லை என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன்.
கோபிநாத்