பிரயாகையில்தான் மக்களின் மனநிலையைப்பற்றி மிக எதிரான ஒரு சித்திரம் வருகிறது. அதன் உச்சகட்ட இடம் என்பது விதுரரை மக்கள் எதிர்ப்பதுதான். அவர் மக்கள் மீதான எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிடுகிறார். உணமையில் அவர் அதுவரை மக்களைப்பற்றிய நம்பிக்கை கொண்டவராகவே இருக்கிறார்
மக்களைப் பற்றிய இப்படிப்பட்ட பார்வை இளையவர்களிடமும் இருக்கிறது. தருமனை தொடர்ந்து யாதவர்கள் நாங்களும் வருகிறோம் என்று வரும்போது அர்ஜுனன் சொல்லுவதைக் கவனித்தால் இது தெரியும். பீமன் மட்டும்தான் மக்களில் ஒருவனாக இருக்கிறான். தருமனுக்கு மக்கள் அற்பர்கள் என்று தெரிநதாலும் அன்புடன் இருக்கிறான். இதுதான் வித்தியாசம்.
மக்கள் மீதுள்ள இந்த அவநம்பிக்கை ஆரம்பம் முதலே வந்துவிட்டது. அதாவது முதற்கனலில். பிரதீபர்சாகப்போவதை எதிர்பார்த்து மக்கள் நிற்கும் இடம். அறத்தின் மீது இச்சையின் கொடி ஏறிவிட்டது என்று இதைத்தான் ஒரு சோதிடன் சொல்கிறான். பிறகு அவனே சாமியாக ஆகிவிடுகிறான்
அறத்தின்மீது இச்சையின் கொடி ஏறிவிட்ட விஷயத்தை மக்களின் நடத்தையில் இருந்து அறிவதனால்தான் அரசகுலத்தவர்கள் மக்களை பயப்படுகிறார்கள். மக்கள் தங்களை அநீதி நோக்கிக் கொண்டுசென்றுவிடுவரகள் என்று நினைத்து அவர்கல் முடிந்தவரை தங்களை தற்காத்துக்கொள்ள நினைக்கிறாரக்ள் என்று தோன்றியது
அருண்
வெண்முரசு குழுமத்தில் விவாதிக்க