Saturday, January 24, 2015

சூரிய சந்திர நாயகி



ஜெ

வண்ணக்கடல் தொடக்கத்தில் குந்தியைப்பற்றி சூதன் பகடியாக ஒன்று சொல்வான். ஒரு பெண் சூரியனையும் காற்றையும் இடிமின்னலையும் குதிரைகளையும் சாவையும் புணர விரும்பினாள். அவள்தான் குந்தி. அவள் அவற்றின் பிள்ளைகளைப் பெற்றாள் என்று

திரௌபதியை எண்ணிக்கொண்டேன். குந்தி அந்த ஆற்றல்களை உண்மையில் புணர்ந்தாளா இல்லை அவற்றை வாங்கிக்கொண்டாளா என்று தெரியவில்லை.இவள் உண்மையிலேயே ஐந்தையும் மணக்கப்போகிறாள்

பஞ்சபூதங்களைப்போல ஐந்து சக்திகளும் இவளுக்கு சேவை செய்யப்போகின்றன என்று தோன்றியது. சூரியன் மட்டும் இவளுக்கு அகப்படுவதே இல்லை என்றும் நினைத்துக்கொண்டேன்

திரௌபதியைப்போல மர்மமான ஒரு கதாபாத்திரம் இந்தியாவின் இதிகாசங்களிலே இல்லை. எழுத எழுத விரிந்துகொன்டே செல்கிற கதாபாத்திரம் அது

சுகுமார்