அன்புள்ள ஜெ
பிரயாகையை மறுவாசிப்பில் சென்றுகொண்டிருக்கிறேன். மிஸ் பண்ணின இடங்களை எல்லாம் தொட்டுத்தொட்டு வாசித்து வருகிறேன். ஒவ்வொரு கதைக்கும் சம்பந்தம் உள்ளது
தபதியின் கதை ஒருவகையில் பாஞ்சாலியின் கதையேதான் அத்போல பிற கதைகளையும் எடுக்க முடியுமா? பகீரதன் தவம் செய்து கங்கையைக் கொண்டுவருகிறான். அதேபோல பாஞ்சாலியை அடைகிறார்கள் . அவள் விழுந்த இடம் அழியும் என்பதனால் சிவன் உதவிசெய்கிறார். அதேபோல இங்கே கிருஷ்ணன்
நாவலில் எனக்கு தோன்றிய ஒரு விஷயம் பீமன். அவன் அனுமனின் கதையை மகனுக்குச் சொல்கிறான். பீமன் பாஞ்சாலி என்கிற சூரியனைக் கவ்வப்போய் வாய்வெந்த குரங்குதானா?
கேசவன்