ஜெ,
வெண்முரசு நாவலின் இதுவரையில் அடைந்த வெற்றி என்ன என்று ஒரு நண்பர் கேட்டார்
இந்தமாதிரி கிளாஸிக்குகளை திரும்ப எழுதும்போது வரக்கூடிய சிக்கலே சில ஆர்கிடைப் அல்லது ஸ்டாக் கேரக்டர்களைத் தவிர்ப்பதுதான். ஆனால் கிளாஸிக்குகள்தான் அந்த ஆர்கிடைப்புகளை உருவாக்கி நம் கலாச்சார ஞாபத்திலே நிறுத்தி வைத்திருக்கின்றன. அவற்றை விடவும் முடியாது. அவற்றை உடைத்தால் கிளாஸிசமே இல்லாமலாகிவிடும்
உதாரணமாக trickster , wise old man இரண்டு கதாபாத்திரங்களையும் Carl Jung குறிப்பிடுகிறார். அவற்றை தவிர்க்க முடியாது. பெரும்பாலும் எல்லா கிளாஸிக்குகளிலும் அவர்கள் இருப்பார்கள். மகாபாரதத்திலேயே வியாசர், வசிஷ்டர், வைசம்பாயனர், பீஷ்மர், துரோணர் என்று ஏகப்பட்ட ஞானியான முதியவர்கள் இருக்கிறர்கள். சகுனி ஒரு தந்திரச்சதிகாரன்.
அந்தக்கதாபாத்திரங்களை நீங்கள் கையாண்டிருக்கும் விதம்தான் இதை நவீன கிளாஸிக் ஆக்குகிறது. தந்திரக்காரனாகிய சகுனிக்கு பல தளங்கள் கொடுத்து அவனை உயிருள்ள காம்பிளெக்ஸ் கதாபாத்திரமாக ஆக்கி அவன் டைப் கதாபாத்திரமாக அல்லாமல் ஆக்கிவிட்டீர்கள். வியாசரையும் மற்றவர்களையும் தவிர்த்து விட்டீர்கள். பீஷ்மர் துரோணர் இருவரையும் ஆசாபாசங்கள் கொண்ட மனுஷர் .களாக ஆக்கிவிட்டீர்கள்
அது பெரிய சாதனைதான். வாழ்த்துக்கள்
சண்முகம்
wise old man