Sunday, January 18, 2015

காளிரூபி



ஜெ

பாஞ்சாலி மாலையிட வரும்போது அர்ஜுனன் தயங்குகிறான். நுட்பமான இடம். அவள் மூலம் நிகழப்போகும் அழிவு அவனுக்குத்தெரிந்திருக்கலாம். அவளுடைய சித்திரமே அற்புதமாக முடிகிறது. ரத்தமும் மலரிதழ்களும் படிந்த முகம். அந்த கதையே ரத்தத்தில் தொடங்குகிறது. ரத்தபலி ஏற்கும் சண்டிகை. அதன்பிறகு ரத்த உணவு. பாஞ்சாலியின் ரத்தக்குளியல். கடைசியில் இந்த ரத்தத்திருமணம்

ரத்தம் என்னென்னவோ குறியீடுகளைக் கொண்டு வந்துவிடுகிறது மனதிற்குள். கொற்றவை என்ற வார்த்தை வழியாக அவளை மீண்டும் மீண்டும் வகுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்

ஆனால் அதேசமயம் அவள் கனிந்த அன்னை. நகுலனையும் ச்காதேவனையும் அவள் அம்மாவாகவே நடத்துகிறாள் என்பது அந்த சூயிங் கம் மெல்லும் காட்சியில் தெரிகிறது. அவளுடைய கண்டிப்பு அப்படிப்பட்டது.

அற்புதமான குணச்சித்திரம்


யாது மாகி நின்றாய் -- காளீ
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் -- நின்றன்
செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் -- வாழும்
பொய்ம்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதி சக்தி, தாயே-என் மீது
அருள்புரிந்து காப்பாய்.