Tuesday, January 20, 2015

மாறும் முகங்கள்



ஜெ

வெண்முரசில் இதுவரை வெவ்வேறு கதைமாந்தர் வந்துகொண்டே இருக்கிறார்கள். நாம் மகாபாரதம் கதை கேட்கும்போது கதாபாத்திரங்களை டைப் ஆகவே புரிந்து வைத்திருப்போம். கெட்டவன் நல்லவன் என்று. அப்படி இல்லாமல் ஒவ்வொருவரும் நுட்பமாக மாறுதலைடவதை நாம் வென்முரசில் பார்க்கிறோம்.

அதை ஒரு இடைவேளைக்குப்பின்னர் கதாபாத்திரங்கள் வரும்போது காட்டுகிறீர்கள். முகமும் கண்களும் மாரியிருக்கின்றன. குறிப்பாக பாண்டவர்கள் அந்த இடும்பவனத்திலிருந்து வெளியே வந்ததும் மிகவும் மாறியிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படிக்குணாதிசயம் மாறவில்லை. ஆனால் அவர்கள் முழுமையாக மாறிவிட்டிருக்கிறார்கள்

அந்த மாற்றத்தைக் கற்பனைசெய்வதுதான் மகாபாரத வாசிப்பிலேயெ பெரிய இன்மபாக இருக்கிறது

வாழ்த்துக்கள்

சிவகுரு