ஜெ
சுயம்வரத்தில் அர்ஜுனனின் தவிப்பை வாசித்தபோது எனக்கு தனிப்பட்ட முறையிலேதான் தோன்றியது. நாம் ஒரு பெரிய முடிவை எடுக்கும்போது ஏதோ ஒரு உள்ளுணர்வு வந்து நம்மிடம் சொல்லும் வேண்டாம் என்று. படபடப்பாக இருக்கும். ஏனென்றால் நம் மனசுக்கு தெரிந்திருக்கும். ஆனால் தெளிவாக இருக்காது. அதை நாம் பொருட்படுத்தமாட்டோம்
என் திருமணத்தில் அப்படி ஒரு பயம் எனக்கு வந்தது. ஓடிப்போய்விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் திருமணம் நடந்தது. மிகமோசமான அனுபவங்கள். ஜெயில்வாசம். விவாகரத்து. துன்பத்துக்கு அளவே இல்லை
அப்படி உண்மையிலேயே தோன்றியதே ஏன் செய்யவில்லை என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அகங்காரம்தான் காரணம். நாம பெரிய ஆளு நமக்கு எல்லாம் தெரியும் பாத்துக்கலாம் என்ற ஈகோ. அது ஒரு நவீன மனிதனாக நமக்கெல்லாம் இருக்கிரது. அப்படியே செய்கிறோம்
அர்ஜுனன் செய்வதும் அப்படித்தான் அவனுக்குத்தெரிந்துவிட்டது என்ன நடக்கப்போகிறது என்று. உள்ளுணர்வு சொல்லிவிட்டது. ஆனால் ஐந்தாவது அம்பை அடிக்காமல் இருக்க முடியாது. அவனுடைய ஈகோ அப்படிப்பட்டது
கே.