Thursday, January 22, 2015

நீரும் நெருப்பும்



ஜெ

பிரயாகை முடியும்போது மனதில் எழுந்து நிற்கும் முகம் திரௌபதியின் முகம் தான். ஆனால் பிறகு யோசிக்கும்போது இரண்டு முகங்கள் முக்கியமானவை என்ற எண்ணம் வந்தது. திரௌபதி அளவுக்கே இடும்பியின் முகம். அவள்தானே திரௌபதிக்கு மூத்தவள்.

இருவருடைய குணச்சித்திரங்களுக்கும் எவ்வளவு வேறுபாடு. இடும்பி எளிமையான நேரடியான அன்பு மட்டுமே கொண்டவளாக இருக்கிறாள். திரௌபதியின் மனசு என்ன என்பது எவருக்குமே தெரியவில்லை. மாயிக்குக்கு கூட

இடும்பி தண்ணீர் போல குளிர்ந்திருக்கிறாள். ஆனால் திரௌபதி நெருப்பாக எரிகிறாள். இந்த இரண்டு பெண்களையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு புரிந்துகொள்ள முடிகிறது

பாவம் பீமன் அவன் வாழ்க்கையிலே இரண்டு பெண்கள். இரண்டுபேருக்கும் நடுவே அவனுடைய வாழ்க்கை கிடந்து அலைமோதப்போகிறது

எஸ்