[ஒரிய கோண்டு திருமணம். மணிமுடி உருவாகி வந்த வழி ]
ஜெ
வெண்முரசிலே வந்த திருமணச்சடங்குகளை ஆரம்பம் முதலே பார்த்துக்கொண்டு வருகிறேன். ஒருபக்கம் வைதிகச்சடங்கு மாதிரி தெரிகிறது. மறுபக்கம் tribal ஆகவும் தெரிகிறது.
உதாரணமாக திரௌபதியின் திருமணம். அவள் விவசாயம், மாடுமேய்த்தல், மீன்பிடித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்து சம்பாதித்து தன் குடியினருக்குக் கொடுக்கிறாள். இவை மூன்றுமே பெண்களுக்குரிய கடமைகளாக இருந்திருக்கின்றன
ஆனால் மாலைமாற்றுவது, கைப்பிடிப்பது, சப்தபதி [ஏழு அடி வைப்பது] நெருப்பை சாட்சியாக்குவது எல்லாமே வைதிகச்சடங்குகளாகவும் உள்ளன
ஏன் சொல்கிறேன் என்றால் மாத்வ பிராமணர்களாகிய எங்களுடைய திருமணச்சடங்கில் , உடுப்பி பக்கம், மீன்பிடிப்பதுபோன்ற ஒரு சடங்கும் உண்டு.
வேட்டையாடுதல் ஆண்களுக்கான சடங்காக இருந்திருக்கலாம். ஆனால் இங்கே பாண்டவர்கள் அதைச்செய்யவில்லை. அவர்கள் tribal நிலையில் இருந்து மேலே போனவர்கள் என்று நினைக்கிறேன்
இன்னும் சுவாரசியமானது இடும்பியின் திருமணம். அது முழுக்க முழுக்க tribal ஆனால் அதில் வைதிகச்சடங்கு சாயல் இருக்கிறது
இந்த grand mixing தான் வெண்முரசின் பலம். வெண்முரசு பாரதத்தை பிரதிநிதித்துவம் செய்வதும் இதன்மூலம்தான்
ஸ்ரீனிவாஸ்