Saturday, January 17, 2015

கர்ணனும் திருதராஷ்டிரனும்




அன்புள்ள ஜெமோ,

இரண்டு கேள்விகள்:

1. கிஷோரி மோஹன் கங்கூலி தொகுத்த பாரதத்தில் கர்ணன் வில்லை எடுத்தவுடன் கிருஷ்ணையே அவன் சூதன் என்பதால் தடுத்துவிடுவதாக உள்ளது. நீங்கள் அதை வேறு விதமாக (சிறப்பாக)    வெளிப்படுத்தியுள்ளீர்கள். இந்தப்பார்வைக்கு வேறு ஏதேனும் மூல நூல் உள்ளதா?

2. திருதராஷ்டிரனை கிஷோரி மோஹன் கங்கூலி தொகுத்த பாரதத்தில் பொறாமை கொண்ட, கணிகரின் சதிகளுக்கு செவி சாய்ப்பவராக காட்டப்படுகிறார். நீங்கள் காட்டும் திருதராஷ்டிரனுக்கும்     மூல நூல் உள்ளதா?

கிடைத்தால் அந்த மூல நூலையும் படிக்க ஆசை.

நன்றியுடன்,
ஜெய்கணேஷ்.

அன்புள்ள ஜெய்கணேஷ்

தென்னிந்திய பாடம் தான் ஸ்ரீனிவாசாச்சாரியார்- ராமானுஜாச்சாரியார் பதிப்பு [கும்பகோணம் பதிப்பு] ஆக வரிவரியாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆதிபர்வம் 202 ஆம் அத்தியாயம் கர்ணன் மயிரிழையில் தோற்றதாகவே சொல்கிறது

மேலும் மொத்தம் எட்டு இடங்களில் அந்த சுயம்வரத்தில் சூதர்கள் மட்டுமல்ல நான்குவர்ணத்தில் எவர் வேண்டுமென்றாலும் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கபப்ட்டிருப்பதாகச் சொல்கிறது. திருஷ்டதுய்ம்னன் சபையில் அவ்வாறுதான அறிவிக்கிறான்

2 கணிக நீதி மகாபாரதத்தின் பிற்சேர்க்கை. அர்த்தசாஸ்திரத்திற்கும் பின்னால் எழுதப்பட்டது. [இந்நாவலில் வேறுவகையில் அளிக்கப்பட்டுள்ளது]அதை திருராஷ்டிரரிடம் கணிகர் சொல்லி அவர் மனதைக் குலைப்பதுபோல வைத்தால் பிறகு வரும் அவரது நடத்தைகள் தொடர்ச்சி அற்று இருக்கும். அவர் அரக்குமாளிகை எரிந்ததைக் கேட்டு அழுதது மகாபாரதம் மூலத்தில் உள்ளது

ஜெ