Monday, January 19, 2015

சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியும்



[பாஞ்சாலியும் துரியோதனும் கதகளியில்]


பாஞ்சாலிக்கும் துரியோதனனுக்கும் முக்கியமான ஒற்றுமை உண்டு. அவர்கள் இருவருமே சக்கரவர்த்தினி என்றும் சக்கரவர்த்தி என்றும் சொல்லப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். அவர்களைச் சொல்லும்போதே அந்த வார்த்தையும் கூடவே வந்துவிடுகிறது. மாற்றி சிந்திப்பதற்கு அவர்களால் முடிவதே இல்லை.
 
இந்த நிலை அவர்களை ஒருவகையில் சிறியவர்களாக ஆக்கிவிடுகிறது. இன்னொரு வகையிலே பெரியவர்களாக ஆக்கிவிடுகிறது. இருவருக்கும் மிதமிஞ்சிய ஈகோ வருகிறது. அதுதான் அவர்களிடையே உரசல். துரியோதனனின் ஈகோ புண்படுவதனால்தானே போரே வருகிறது. அதேபோல அவர்களின் பெருந்தன்மையும் அரவணைக்கும்தன்மையும் அவர்கள் மானசீகமாக சக்கரவர்த்திகளாகவே இருப்பதனால் வருவது
 
இதுதான் இருவருக்குமே பிரச்சினை. இப்போது துரியோதனன் சக்கரவர்த்தி ஆகவேண்டும். இல்லாவிட்டால் பாஞ்சாலி சக்கரவர்த்தினி ஆகவேண்டும். இரண்டுபேரில் ஒருவர்தான் இருக்கமுடியும். துரியோதனனை பாஞ்சாலி திருமணம் செய்துகொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது இருப்பது ஒரே நாடு. இரண்டு சக்கரவர்த்திகள்
 
இருவருமே பாதிநாட்டால் நிறைவு அடைபவர்கள் கிடையாது. இரண்டுபேருமே பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்திகளாக நினைத்துக்கொண்டு வளர்ந்தவர்கள். இந்த முரண்பாட்டிலே இருந்துதான் மகாபாரதமே ஆரம்பிக்கிறது

அருண்

குழுமத்தில்