Tuesday, January 20, 2015

மகாபாரத தெய்வங்கள்



மகாபாரதம் அர்ஜுனனை கடவுளாக்குகிறதா? அதனால் தான் ராமன் வில் ஒடித்தது போன்று ஒரு நிகழ்வு இதிலும் எழுதப்பட்டதா. அர்ஜுனன் சிவனுடன் சண்டையிடுதல் எந்த இடத்திலும் தோற்காமை. இந்திர லோகம் செல்லுதல் தெய்வீக அஸ்திரங்களை அடைதல் பெண்கள் அவனை கண்டு ஏங்குதல் பலவிதமான பட்ட பெயர்கள் சில இடங்களில் கிருஷ்ணன் என அழைக்கப்படுகிறான் ஒரு வேலை பின்னாளில் யாதவ கிருஷ்ணன் கடவுளாக்கப்படவில்லை என்றால் அர்ஜுனன் கடவுள் ஆயிருப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் தானே.

கோபிநாத்

அன்புள்ள கோபிநாத்

மகாபாரதத்தில் உள்ள பெரும்பாலான மையக் கதாபாத்திரங்கள் தெய்வங்களாகியிருக்கின்றன. அர்ஜுனன் கர்ணன் திரௌபதி தருமன் போன்றவர்கள் மட்டும் அல்ல இடும்பி கடோத்கஜன் சிகண்டி போன்ற சின்னக் கதாபாத்திரங்களும் துரியோதனன் போன்ற எதிர்கதாபாத்திரங்களும்தான்

அது இக்காவியம் அடிப்படையான மானுடகுணங்களை கதாபாத்திரங்கள் ஆக மாற்றுகிறது என்பதன் விளைவே

ஜெ