ஜெ
பிரயாகை முடிந்தபின்னர் நான் ஒட்டுமொத்தமாக யோசிக்கும்போது ஒரு பெரிய பிரமிப்பு மட்டும்தான் இருக்கிறது. என்னென்னவோ நடந்து எங்கேயோ வந்ததுபோல. சன்முகம் என்பவர் எழுதிய கடிதம் சுருக்கமாக அத்தனை நாவலையும் நினைவில் கொண்டுவந்தது. மொத்தமாக மீண்டும் நினைத்துக்கொண்டேன். நிறைய செய்திகள் விடுபட்டிருப்பது நினைவில் தெரிந்தது
அதன்பிறகு ஒரு exercise செய்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி உருமாறி வந்திருக்கிரது என்று பார்க்க ஆரம்பித்தேன். முக்கியமாக பார்த்தது அர்ஜுனன். துடிப்பான மாணவனாக அவனை வண்ணக்கடலில் பார்த்தது. குருநாதர் மீது பெரும் பக்தி. அவரை அப்படியே முழுசாக உள்வாங்கிவிடவேண்டும் என்ர வேகம். அவருக்கு தன்னைவிட சிஷ்யர்கள் இருக்கக்கூடாது என்ற பொறாமை
அது ஒருபக்கம் என்றால் அம்மா மீது ஒரு பெரிய ஈடுபாடு. அம்மா நெருங்க விடாத ஏக்கம். அதனால் எப்படியோ விதுரன் மேல் கோபம். அம்மா இல்லாத இடத்தை குருவை வைத்து நிறைக்கிரான். அப்போதுதான் குரு துருபதனை போய் ஜெயித்துவிட்டு வா என்கிறார். துருபதனை ஜெயிக்கிறான். ஆனால் உள்ளூர குருவை கைவிடுகிறான். அவரது அர்பத்தனம் கண்ணிலே படுகிறது
அதன்பிறகு தத்தளிக்கிறான். காமத்தில் இறங்குகிறான். அப்போது கிருஷ்ணனைச் சந்திக்கிறான். கிருஷ்ணனை சோதனைசெய்தபடியே இருக்கிறான். அதன் ஒரு நிலையில் பாஞ்சாலியை கண்டுபிடித்திருக்கிறான்
இப்போது அவன் முன் இரண்டு பெர்சனாலிட்டிகள். ஒருபக்கம் கிருஷ்ணன் இன்னொருபக்கம் திரௌபதி. அவன் அலைக்கழியப்போகிறான் என்று தோன்றியது
பார்ப்போம்
மோகன்ராஜ்