ஜெ சார்
வெண்முரசை இனிமே ல் கொஞ்சநாள் வாசிக்கமுடியாது என்பது வருத்தமாக இருக்கிறது. பழைய கதைகளை வாசிக்கலாம் என்றால் என்ன சிக்கல் என்றால் மனசு ரொம்ப முன்னாடி வந்துவிட்டது. மீண்டும் ப்ழையவற்றை உடனே போய் வாசிக்கமுடியவில்லை. அதாவது மனசுக்குள் பீமனும் அர்ஜுனனும் மிகவும் வளர்ந்துவிட்டார்கள். சின்னப்பையன்களாக வாசிக்க முடியாது. கிருஷ்ணனையே இனிமேல் சின்னக்குழந்தையாக வாசிக்கமுடியாது. வாசிக்கலாம் ஆனால் கொஞ்சநாள் ஆகும்
பிரயாகைதான் இதுவரை வந்த நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் இதிலே ஒரு பரபரப்பான கதை இருந்தது. அதேபோல பலவகையான மண்ணும் மனிதர்களும் இருந்தார்கள். எண்ணிப்பார்க்கும்போது எவ்வளவு இடங்கள் என்ற நினைப்புதான் வருகிறது. வராணவதத்துக்கு இருந்த அந்த குகைக்கோயிலை நான் ஒருமுறை கனவிலே கண்டேன்’’’
‘அதேபோல இதில் ஏராளமான விஷயங்கள் பிறகு யோசிக்கும்போது குறியீடுகளகாத் தோன்றியது. வாரணவதம் மாளிகை எரிவதும். அவர்கள் குகை வழியாகத் தப்புவதும். அவர்கள் அதன்பின் அலைவதும் எல்லாமே குறியீடுபோல உள்ளது.
அந்த இடும்பவனம் உண்மையிலே இல்லை. அது பீமனின் ஒரு wishful thought மட்டும்தான் என்று நினைத்தால்கூட சரியாகத்தான் இருக்கிறது. அப்படி ஒரு காடு .அப்படி ஒரு மனைவி. அதுதானே அவன் நினைத்து ஏக்கம் கொள்வதாக இருக்கமுடியும்
ராஜி