Friday, January 23, 2015

கிருஷ்ணனின் சிரிப்பு



அன்புள்ள ஜெ,

பிரயாகை முடிந்ததை ஏற்க முடியாமல் இரண்டுநாள் மனசில் ஒரே தவிப்பு. ஒவ்வொரு நாவலுக்கும் இப்படி ஆகிறது. என்னவென்றே சொல்லமுடியாதபடி. அதுதான் நாவல் அளிக்கும் அனுபவம் என்று தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தபிறகு ஒரு ஆசுவாசம் ஏற்படுகிறது. அதன்பிறகுதான் கேள்விகளும் ஆராய்ச்சியும் எல்லாம் உருவாகிறது

இந்த நாவலின் மையக்கதாபாத்திரமே கிருஷ்ணன் தான் என்று நினைக்கிறேன். அவன் உள்ளே வந்ததும் அந்த மதுராப் படையெடுப்பும் அவனை மற்றவர்களின் வார்த்தைகள் வழியாக மட்டுமே அறிமுகம் செய்வதும் எல்லாமே அற்புதமாக இருந்தன

கிருஷ்ணனின் சிரிப்பை என்னால் கற்பனையில் காணமுடியவில்லை. ஆனால் நான் நன்றாக அறிந்த சிரிப்பைப்போலவே அது தோன்றுகிறது. சிரிப்புக்கு கிருஷ்ணன்தானே. நீலம் நாவலை நான் ரொம்ப பிந்தித்தான் வாசித்தேன். அதிலும் கிருஷ்ணன் இருந்தான். ஆனால் அந்த சிரிப்பு வேறு. காதல்சிரிப்பு. இதுதான் கொல்லும் சிரிப்பு. இதுதான் எனக்குப்பிடித்திருக்கிறது

ஏன் என்றே தெரியவில்லை. இனிமேல் குழலூதும் கிருஷ்ணனையே நினைக்கமுடியாது என்று தோன்றிவிட்டது

மேகலா நாதன்