Tuesday, November 20, 2018

அவன் அவர் 2


அன்புள்ள ஜெ,
 
வாசகரின் அவன் அவர் குறித்த கேள்வி எனக்கும் இருந்தது. வாசிக்கும்போது, அந்தப் பயன்பாடு மிகவும் இயல்பாகப் பாத்திரங்களுடன் பொருந்திப்போனாலும், இதற்கு ஏதேனும் அடிப்படை விதி இருக்குமோ என்று தோன்றியது. விளக்கத்திற்கு நன்றி.

திருதராஷ்டிரருக்குப் போர்க்களக்காட்சிகள் விளக்கப்படும்போது ஏறத்தாழ அனைவருமே, மிகச் சிறுவயது இளவரசர்கள் உட்பட, அவர் என்றே குறிப்பிடப்பட்டதைப் படித்தபோது முதலில் சற்றே குழப்பமாக இருந்தது. பிறகே, இவை சஞ்சயனின் சொற்களல்லவா, அவரால் அவர்களை வேறெப்படிக் குறிக்க முடியும் என்பது உறைத்தது.  

அன்புடன்
பாலகிருஷ்ணன்,
சென்னை