Tuesday, November 13, 2018

போர் எனும் முத்தாய்ப்பு



ஜெ

இந்த போர்ப்பகுதிகளை வாசிக்கையில் ஒரு விளையாட்டுப்போட்டியை வாசிப்பதுபோல யார் ஜெயிப்பார், எப்போது ஜெயிப்பார், நாம் ஏற்கனவே வாசித்து அறிந்த கதைநிகழ்வு எப்போது வரும் என்றெல்லாம் வாசிப்பது தவறானது. அப்படித்தான் பலர் வாசிப்பார்கள். இந்தப்போர் இதுவரை வெண்முரசில் வந்த நாவல்களுக்குப் போடப்பட்ட பெரிய ஒரு முத்தாய்ப்பு. இதில் வந்த கதைகள் அனைத்துக்கும் இங்கே ஏதோ ஒரு முடிவு சொல்லப்படுகிறது. வெண்முரசில் வந்த தெய்வங்கள் எல்லாமே இங்கே வந்துகொண்டிருக்கின்றன. வெண்முரசை ஒரு தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் இந்த நாவலில் பல இடங்கள் தெளிவாவதைக் காணலாம். பிரயாகையில் ஒரு சாமியார் பாஞ்சாலியைக் கண்டு தற்கொலை செய்துகொள்வதுபோல வரும். அங்கிருந்து இங்குவரை தெய்வங்களின் கண்ணுக்குத்தெரியாத சரடு ஒன்று உள்ளது. அதை இங்கே காணமுடிகிறது

எம்.மாரிமுத்து