Thursday, November 15, 2018

குடியன்னையின் பழி

  
 திசைதேர் வெள்ளம்-64
 
“நம் குடியன்னையின் பழி ஒன்று நம் கணக்கில் உள்ளது. என்றேனும் ஏதேனும் களத்தில் அன்னையின் வஞ்சம் எழும் என்று நிமித்திகர்கள் கூற்று.

முதலில் பூசகனில் வெறியாட்டெழுந்து அன்னை ஆணையிட்டாள். “கௌரவர்களுடன் சேர்ந்துகொள்க, சிசுபாலனைக் கொன்ற இளைய யாதவர்மேல் குருதிவஞ்சம் தீர்த்து என்னை விண்ணேற்றுக!” என்றாள்.
   
பின்னர் "என் மைந்தரே, சென்று பாண்டவர்களுடன் சேர்ந்துகொள்க! என் மைந்தன் திருஷ்டகேது அங்கே படைக்கூட்டு கொண்டிருக்கிறான். அவனுக்கு துணைநில்லுங்கள்” என்று ஆணையிட்டாள். 
     
இறுதியில் மீண்டும் “என் மைந்தரே, கௌரவர்களிடம் செல்க! அங்குள்ளது உங்கள் வெற்றி. என் மைந்தன் தந்தையின் குருதிக்கு வஞ்சமிழைத்தவன். இளைய யாதவரின் குருதிகொண்டு என்னை நிறைவுசெய்க! என் கொழுநரை விண்ணேற்றுக!” என்று ஆணையிட்டாள்.  
      
இவ்வாறு காரூஷர்களை அங்கும்,  இங்குமாக அலைத்து தந்தையையும், மைந்தரையும்  பிரித்து எதிரிகளாக்கி களத்தில் மோதவிட்டு   இறுதியில் அன்னை தன் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டாாள்.