Tuesday, November 13, 2018

தெய்வமும் ஊழும்



அன்புள்ள ஜெ

பிருகத்பலனும் அபிமன்யூவும் ஊழால் சேர்த்துத் தைக்கப்பட்டிருக்கிரார்கள். அவர்கள் மாறிமாறிக் கொல்வார்கள். அதற்கும் குருஷேத்ரத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் அது குருஷேத்திரத்தில் நடக்கிறது. அப்படி அங்கே நடக்கும் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்றும் கோர்க்கப்பட்டிருக்கிறது

குருஷேதிரப்போர் நடக்கும் முறையை தெய்வங்களின் முடியாதபோர் என்று முந்தைய அத்தியாயம் காட்டியது. அது அப்படியே திரும்பி அது ஊழின் முடிவில்லாத பின்னல் என்று இன்றைய அத்தியாயம் காட்டுகிறது. மனிதர்களின் தலையெழுத்துக்கும் அந்த தேவர்களின் பூசலுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களும் இவர்களை ஆட்டுவிக்கிறார்களா? போர் ஊழால் நடத்தப்படுவதா தெய்வங்களாலா?

சரவணன்