Wednesday, November 28, 2018

சிகண்டியின் புல்லம்புகள்




அன்புள்ள ஜெ

சிகண்டியின் புல்லம்புகள் எதைக்குறிக்கின்றன என்று எனக்கு தடுமாற்றமாகவே இருந்தது, அவை பாம்புக்குஞ்சுகள் போல சென்று கவசங்களின் இடைவெளிக்குள் நுழைந்தேறுகின்றன. பீஷ்மரை நிலைகுலையச்செய்தவை அவை. அவரை அவைதான் வீழ்த்துகின்றன. அவரை கொல்லப்போகும் அம்புகளும் அவைதான். அப்படியென்றால் அவை என்ன?

அதன்பின்னர்தான் அவை பற்றிய குறிப்பு வெண்முரசில் முதற்கனல் நாவலின் கடைசியில் வருகிறது என்பது எனக்குப்புரிந்தது. அது பீஷ்மர் மட்டுமே அறிந்த கலை. அது கங்கர்களின் விற்கலை. அதை அவர்தான் சிகண்டிக்குக் கற்றுக்கொடுக்கிறார். அந்தக்கலையை கற்றால்தான் பீஷ்மரை கொல்லமுடியும் என்று சொல்லித்தான் அதை அவரிடம் சிகண்டி கோருகிறான். சிகண்டியின் கோபம் நியாயமானது என உணர்ந்து அதை பீஷ்மர் அவருக்கு அளிக்கிறார்

இவையனைத்தும் ஒரேயடியாக நினைவுக்கு வந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. எவ்வளவுபெரிய கதை. எங்கே தொடங்கிஎங்கே வந்து முடிந்திருக்கிறது!

ராகேஷ்