Saturday, November 17, 2018

பெண்கள்



அன்புள்ள ஜெயமோகன் சார் ,

வெண்முரசின் "போர்காவியமான" திசைதேர்வெள்ளத்தில் ஏன் பெண்களின் மனவோட்டங்களே இல்லை? திருதாஷ்டிரர் கூட அனைத்தையும் அறிந்து கொள்கிறார்.

போர் தொடங்குவதிற்கு முன் களத்திற்கு சில வேசிகள் வந்து செல்கின்றனர். ஓரிடத்தில் குந்தி, திரௌபதி பற்றி குறிப்பு வருகிறது.பீஷ்மரின் கனவில் அவரின் தாய் கங்கை வந்து செல்கிறாள். பலி தெய்வங்கள் பெண்வடிவில் நுண்வடிவில் குருஷேத்திரத்தில் ரத்ததிற்க்காய் அலைவதாய் வெண்முரசு சொல்கிறது.

குருஷேத்திரம் நடக்ககூடாது என முன்பு பாண்டவர்களின் மனைவியரில் சிலரும் கவுரவர்களின் மனைவியர் சிலரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இப்போது கவுரவர்கள் கொத்து கொத்தாய் சாகிறார்கள். ஆனால் ஒரு மனைவியாய் அவர்களின் எண்ணங்கள் என்ன? பாண்டவர்களின் பக்கமும் அரவான் தன்னை பலி கொடுக்கிறான்.

இந்த பெண்களின் மனவோட்டங்கள் பின்னால் வருமா? இல்லை, இது ஆண்களின் உலகம் மட்டும்தானா? 

அரசமகளிர் அனைவருக்கும் புறாக்களும் ஒற்றர்களும் இருக்கிறார்கள். போர்களத்திற்கு உள்ளேயே புறாக்கள் தூது செல்கின்றன.

கவரவ, பாண்டவகுடி பெண்கள் போர்களத்தின் செய்திகளை அறியவில்லையா? அறிந்தால் என்னவாக அவர்கள் தங்களை வெளிபடுத்துவார்கள்? பானுமதி, காந்தாரி, சுமத்திரை, பாஞ்சாலி, குந்தி, துச்சளை முதலியோர் என்ன நினைக்கிறார்கள்? 

மூல மகாபாரத்தில் உள்ளதுபடிதான் வருமா? 

எதாவது தப்பாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்.   
regards,
stephen raj kulasekaran.p



அன்புள்ள ஸ்டீபன்

போருக்குள் பெண்களுக்கு இடமில்லை. ஆகவே இங்கே அவர்கள் நேரிடையாக வரமாட்டார்கள்

போருக்குப்பின் பேசப்படுவன எல்லாமே பெண்களைப்பற்றித்தானே?

வெண்முரசு நேரிடையான மகாபாரதம் அல்ல.

ஜெ