அன்புள்ள ஜெ
பீஷ்மரின் அம்புப்படுக்கை
ஆச்சரியமான ஒரு கற்பனை. இத்தனை நாள் கதைகேட்டுவந்தபோதும்கூட இப்படி இருக்கக்கூடுமோ
என்று எண்ணியே பார்க்கவில்லை. உடலெங்கும் புண்பட்டவரை படுக்கவைப்பதற்கான ஒரு முறை அது.
ஒருவகையான அக்குபஞ்சர் போல. அதில் அவர் படுத்திருக்கிறார். அதன் மேல்பகுதி அவர் உடலின்
அமைப்புக்கு ஏற்ப அமைக்கப்பட்டு எடைதாங்குவதாக இருக்கிறது. ஆகவே அவர் மிதப்பதுபோல அதன்மேல்
கிடக்கிறார். உடம்பில் எந்த படுக்கைப்புண்ணும் வராமலிருக்கும். நடைமுறையில் எந்தளவுக்குச்
சாத்தியம் என ஏதாவது அக்குபஞ்சர்காரர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் அழகான கற்பனை
செல்வக்குமார்