Thursday, November 15, 2018

நீலம்



ஜெ

நீலம் நாவலை இப்போதுதான் மீண்டும் ஒருமுறை வாசித்து முடித்தேன். ஒரு ஹிந்துஸ்தானி கச்சேரி கேட்ட அனுபவம். நம் பாடகர்களிடம் பித்து கிடையாது. ஹிந்துஸ்தானி பாடகர்கள் நம்மை கனவிலும் பித்திலும் கொண்டுசென்று விட்டுவிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலை. நான் வாசிக்கும் மொழியே என்னை அப்படி ஆக்கியது. நம் மனசுக்குள் ஒரு லாஜிக் மொழி இருக்கிறது. அந்த மொழி அசைந்துவிடுகிறது. கலங்கிவிடுகிறது. வேறு ஒரு மொழி வந்துவிடுகிறது. அதையே புலம்ப ஆரம்பித்துவிடுகிறோம். நீலம்தான் தமிழில் இன்றுவரை எழுதப்பட்ட படைப்புகளில் உச்சம். அதற்கு அருகே செல்லக்கூட ஒரு படைப்பு இங்கே இல்லை

எம்.ஆர்.சந்தானகிருஷ்ணன்