Saturday, November 24, 2018

கலக்கம்




அன்புள்ள ஜெ

படைகளில் அனைவருக்குமே மனம் தளர்ந்து சமநிலை இல்லாமல் ஆகிவிட்டிருப்பதை வெண்முரசின் எல்லா குறிப்புகளும் காட்டுகின்றன. போர் பத்தாம்நாளை நெருங்கிவிட்டது. தூக்கமின்மை. சோர்வு. அதோடு போரால் என்ன பயன் என்னும் எண்ணம். எல்லாருமே சித்தம் கலங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள்.கனவுகள் காண்கிறார்கள். மருத்துவநிலையின் காவலன் கிறுக்கன் போலிருக்கிறான். பீஷ்மரின் காவலன் தூங்கிவழிகிறான். அவர்கள்தான் தெய்வங்களையும் பேய்களையும் காண்கிறார்கள். அந்த மனமயக்க நிலை மெல்லமெல்ல வந்துசேர்வதை ஆரம்பம் முதலே உணரமுடிகிறது. சஞ்சயன் கலங்கிவிட்டான். இப்போது மொத்தப்படைகளுமே கலக்கமடைந்துள்ளன.

எஸ்.ராஜேந்திரன்