ஜெ
சிதையின் முன்னால்
வைத்து சிகண்டியும் மைந்தரும் சந்தித்துக்கொள்ளும் காட்சியே ஒரு பெரிய சித்திரமாக அமைந்தது.
மைந்தரும் தந்தையும் சந்தித்துக்கொள்வதற்கு இதைவிட கொடூரமான இடம் வேறு கிடையாது. ஆனால்
சிகண்டி மைந்தரை தன் சாவுக்குச் சாட்சியாகத்தான் அழைத்திருக்கிறார். அவர்களின் உறவின்
அர்த்தமே வேறுதான். வழியெங்கும் செத்து அடுக்கப்பட்டுள்ள பிணங்களின் வரிசையைப்பார்த்துக்கொண்டே
சென்று அவர்கள் சிகண்டியைச் சந்திக்கிறார்கள். அந்தக்காட்சியை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கே
நிறைய கற்பனை தேவைப்பட்டது
மகாதேவன்