அன்புள்ள ஜெ
போர்க்களத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைத்திறமைகளுடன் வெளிப்படுகிறார்கள். பலரை வெண்முரசு தொட்டுச் செல்கிறது. பெரும்பாலானவர்களுக்கு கடமையுணர்ச்சி. பலருக்கு நிலம் வேண்டுமென்ற ஆசை. கணிசமான இளைஞர்களுக்கு புகழுக்கான முனைப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை. ஆனால் அனைவருமே சென்றுசேரும் வெறுமை ஒன்றுதான்
ஆனால் உண்மையான வெறுமை போர்க்களத்தில் வஞ்சமும் வன்மமும் கொண்டு நின்றிருப்பவர்களுக்குத்தான் என நினைக்கிறேன். களத்தில் பீமன் ஆடும் வெறியாட்டத்தை வாசிக்கையில் அவன் எவ்வளவுபெரிய வெறுமைநோக்கிச் செல்லப்போகிறான் என்றே தோன்றுகிறது
ஆர்.சுவாமிநாதன்