அன்புள்ள ஜெ,
பீஷ்மரின் படுகளத்தைப்
பற்றிய எத்தனை கவித்துவக் குறிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. நினைவிலேயே அவை நிற்பதில்லை.
இந்த நாவல்களின் பிரச்சினையே இதுதான். வெள்ளம்போல குவிந்து ஆளையே மூழ்கடித்துவிடுகின்றன
டீடெயில்களும் இமேஜ்களும்.
அந்த அம்புப்படுக்கை.
அதை ஏன் அமைக்கிறார்கள் என்பது பெரிய ஆச்சரியம். நான் அவர் தன் உடம்பில் குத்திய அம்புகளாலான
படுக்கையில் கிடந்தார் என்றுதான் வாசித்திருக்கிறேன். ஆனால் அது மகாபாரத வரிகளிலிருந்து
உருவான ஒரு குறைவான கற்பனை. அவர் அத்தனை அம்புகளுடன் எப்படிப் படுக்க முடியும்? நீங்கள்
சொல்வதே பிராக்டிகலாக சரி என்று பருகிறது. இத்தகைய படுக்கைகள் அன்றைக்கு இருந்திருக்கலாம்
அத்தனை அம்புகளும்
அவர்மேல் படாதவை. அவையே அவரைத் தாங்குகின்றன. பட்ட அம்புகளின் புண்ணை படாதவை ஆற்றுகின்றன.
அழகான கற்பனை
பாஸ்கர்