அன்புள்ள ஜெ
திருதராஷ்டிரரிடமிருந்து
பெருங்கனவை சஞ்சயன் பெற்றுக்கொள்கிறான். போருக்குமேலே நிகழும் பெரிய போரை. கணந்தோறும்
நிகழும் பிரபஞ்சப்போராக அவன் அதை உருமாற்றிக்கொள்கிறான். திரும்ப அவனுக்கே அதை அளிக்கிறான்.
இந்த நீண்ட பரிமாற்றமே இரண்டு அத்தியாயங்களிலாக வருகிறது
போர் தெய்வங்களின்
போராக முதலிலும் தெய்வங்களே மனிதர்களுடன் இணைந்து ஆட்டுவிக்கும்போராக மீண்டும் சொல்லப்படுகின்றன.
ஒவ்வொரு செயலும் எண்ணங்களும் அதற்குரிய தெய்வங்களால் நிகழ்த்தப்படுகின்றன. அந்தப்போரின்
நிழலாட்டமாகவே குருசேத்திரத்தில் நிகழும் போர் காட்டப்படுகிறது
எஸ்.பி.சாரதி