Monday, November 26, 2018

பீஷ்மரின் வீழ்ச்சி





அன்புள்ள ஜெயமோகன்

பீஷ்மர் களத்தில் விழும்காட்சியை பலமுறை பலவகைகளில் பார்த்துவிட்டேன். பலவடிவங்களில் வாசித்தும்விட்டேன். ஆனாலும் வெண்முரசில் அவர் களத்தில் விழும்காட்சி நிலைகுலையவைத்தது. அதற்குப்பல காரணங்கள் முதல்காரணம் பீஷ்மர் என்பவர் ஒரு பெரிய அடையாளம். பல ஆயிரம் ஆண்டுகளாக மூதாதை என்ற வடிவத்தின் அடையாளமாக அவரே இருக்கிறார்.

 இன்னொன்று பீஷ்மர் இந்நாவலில் மிக இளைஞனாக அறிமுகமாகி பலவகையான சந்தர்ப்பங்கள் வழியாக நம் கண்முன்னால் உருவாகி வளர்ந்து வந்திருக்கிறார் . நிமிர்ந்தவராகவும் உணர்ச்சிகரமானவராகவும் இருக்கிறார். எல்லா பொறுப்புக்களையும் தானே ஏற்றுக்கொள்கிறார். பின்னர் முதுமையும் கசப்பும் கொண்டவராக ஆகிறார். அதன்பின் மனம்விலகிய முதியவர். இவையெல்லாமே நாம் அவருடன் நம்மை ஆழமாகப் பிணைத்துக்கொள்ளச்செய்பவையாக உள்ளன. ஆகவே அந்த இறப்பு நமக்கு ஒரு பெரிய அடியாக விழுகிறது. நாம் அவருடன் வாழ்ந்துவிட்டோம் என்பதுதான் காரணம்

ஜெயபால்