Saturday, November 24, 2018

அன்(ம்)புப்படுக்கை



அன்புள்ள ஜெ,

உங்களது படைப்புலகில் மீள மீள பேசப்பட்ட இரு விஷயங்கள் என அன்னையின் ஆயிரம் முகங்களையும்தந்தையின் பல பரிமாணங்களையும் சொல்லலாம். அன்னையை காட்டி மட்டுமே செல்லும் உங்கள் எழுத்து, தந்தை என்று வருகையில் எங்கோ அறிந்துதொகுத்துபுரிந்து கொள்ளவும் முயல்கிறது என நினைக்கிறேன். வெண்முரசில் மட்டுமே எத்தனை விதமான தந்தையர். ஒவ்வொரு தந்தைக்கும் ஏதோ ஒரு விளக்கம் கதைப் போக்கில் தரப்பட்டிருக்கும். ஒவ்வொரு மகனும் இறுதியில் தந்தையாகவே ஆகிறான். முன்பு ஒரு முறை சுவாமி வினயா பற்றிய கட்டுரையில் இந்திய இளைஞனின் பெரும் சவால் என்பது தந்தையைப் பெற்றுக் கொள்ளுதல் தான் என்று எழுதியிருந்தீர்கள். உண்மை. காலம் காலமாக அன்னையே தந்தையை வரையறுத்து மைந்தருக்கு அளிக்கிறாள். அவள் அளித்த ஆடிகள் கொண்டே தந்தையை அண்மித்தும்சேய்மித்தும் அறிகிறோம். அதைக் கொண்டே ஒரு தந்தையை உருவாக்கி விடுகிறோம். ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு ஆளுமை எழுந்து வருகையில் தந்தையை மீறுகிறோம். மீறி எழுந்த ஒருவன் அதன் பின் தன் இழப்புகளுக்குதவறுகளுக்குவீழ்ச்சிகளுக்கு காரணமென ஒரு எளிய இலக்காக தந்தையையே அடைகிறான். அவ்வாறு முரண் பட்ட பிறகேதன் மைந்தனிடம் தான் நடந்து கொள்ளும் முறையில் தன் தந்தையைக் கண்டடைந்து தன்னை அவராக உணர்ந்து கொள்கையில் தானும் தந்தை ஆகிறான். அப்போது தான் அவன் தந்தையை முழுமையாகப் பெற்றுக் கொள்கிறான்.

தந்தையரை எழுதி எழுதி நீங்கள் வந்தடைந்த உச்சம் என பின்வரும் வரிகளைச் சொல்லலாம். “நம் வீழ்ச்சிகளுக்கும் சரிவுகளுக்கும் தந்தையரை குறைசொல்வதற்கே நாம் பயின்றிருக்கிறோம். தந்தைவடிவானவருக்கு நிகராக குடிப்பழியும் குலவஞ்சமும் வேறெவருக்கும் அளிக்கப்படுவதில்லை. நம் பொறுப்புகள் அனைத்தையும் தந்தையரிடமே அளிக்கிறோம். நமது கீழ்மைக்கான பொறுப்பையும் அவர்களிடமே கொடுக்கிறோம். அவர்களும் உளம் கனிந்து ஆமென்று பெற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறே என்று தாங்களும்நம்புகிறார்கள். மகவென்று நெஞ்சில் உதைப்பதை மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் அதே உளநிலையில் இறுதிக்கணம் வரை அவர்கள் நீடிக்கிறார்கள். அவர்கள் மண்மறைந்து சொல்லிலும் கனவிலும் விண்ணிலும் நிறைந்த பின்னர் அவர்களுக்கு நாம் என்ன அளித்தோம்என்பதை நாம் உணர்வோம்வாசித்து இரு நாட்கள் ஆகியும் இப்போதும் விழி நிறைவதைத் தவிர்க்க இயலவில்லை. பீஷ்மரின் அம்பு படுக்கையையும்தந்தையரின் நிலையையும் இதைவிட அற்புதமாக சொல்லி விட இயலாது!!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்