ஜெ
பீஷ்மர் போன்ற
ஒரு ஆர்க்கிடைப்பல் கேரக்டரை கடைசியாகக் காட்டும்போது அதை ஒற்றை அர்த்தம் கொடுத்துக்
காட்டாமல் பல்வேறு கோணங்களில் காட்டுவதே வாசகர்களுக்கு பலவகையான வாசிப்புகளுக்கு இடமளிக்கிறது.
இந்நாவலில் பீஷ்மர் ஒரு ஐக்கான் ஆகவே வருகிறார். அவருடைய இயல்பெல்லாம் மாறிக்கொண்டே
இருக்கிறது. கடைசியில் அவருடைய வீழ்ச்சி ஆறேழு கோணங்களில் சொல்லப்படுகிறது. துண்டிகன்,
சுபாகு, துரியோதனன், சகுனி, யுதிஷ்டிரன் என பல கோணங்கள். கூடவே சூதரின் அங்கதம் நிறைந்த
கோணம். அவ்வாறுதான் அவரை மதிப்பிடவேண்டியிருக்கிறது. அவர் வானத்தையும் வில்லால் கட்டிவிடமுயல்வார்
என்ற சூதனின் வரி அவர் மேல் வைக்கப்படும் மிகக்கூரிய விமர்சனம்
ராஜேஷ்