Monday, November 19, 2018

வானம்




ஜெ

இந்தப்போர்க்களத்தில் அத்தனைபேருமே இரவில் வானையும் நிலவையும் விண்மீன்களையும் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார்கள். என்ன நினைக்கிறார்கள் என்பது பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை. ஆனால் அதை ஒருவாறாக உணரவும் முடிகிறது. இங்குள்ள இந்த வாழ்க்கைப்போரின் அபத்தமும் குரூரமும்தான் அவர்களால் நினைக்கப்படும். போரும் அமைதியும் நாவலில் பிரின்ஸ் ஆண்ட்ரே நினைப்பதுபோல வானைப்பார்த்து அங்கே எவ்வளவு அமைதி என்று அவர்கள் நினைப்பார்கள் என்று தோன்றுகிறது. அந்த வானக்காட்சி எனக்கும் அந்தப்போரின் கொந்தளிப்புக்குப்பின் வாசிக்கும்போது ஒருவகையான பதற்றத்தையும் சோர்வையும் அளிப்பதாக உள்ளது

ராகேஷ்