அன்புள்ள ஜெ
சுஜயனைப்பற்றி
சுபாகு அர்ஜுனனிடம் சொல்லும் வரிகள் வந்தபோது உணர்ச்சிவசப்பட்டேன். என்ன ஒரு இக்கட்டான
சந்தர்ப்பம். கொலைகாரனின் கண்களைப்பார்த்து கொல்லப்பட்டவனின் அப்பா பேசுகிறார். நீதான்
அவனுடைய மானசீகமான தந்தை என்கிறான். மனம் கொந்தளித்தது. ஒரு யதார்த்தக்கதையில் அது
வரமுடியாது. ஒரு கிளாஸிக் கதையில்தான் அது வரமுடியும்.
ஆனால் அந்த இடம்
அங்கே ஏன் வருகிறது என பின்னர்தான் புரிந்தது. கிருஷ்ணன் அணுவளவுக்குச் சிறுத்து அந்த
உண்மையையும் தெரிந்துகொண்டு வா என்றுதான் சொல்லி அனுப்புகிறான். ஏனென்றால் அவன் நான்
அர்ஜுனன் என்ற ஆணவத்துடன் வானளாவ நிமிர்ந்தவன். ஆனால் அவனை பீஷ்மர் சாபம் போட்டு அழிக்கவில்லை.
அவனை வாழ்த்துகிறார்.
அவன் அணுவளவாகக்
குறுகிச்சிறுக்கும் இடம் சுஜயனைப்பற்றி சுபாகு அவனிடம் சொல்லும் அந்த சந்தர்ப்பம்தான்
எஸ்.பிரபு