Monday, November 19, 2018

முகங்கள்




அன்புள்ள ஜெ

விசோகனை பீமன் அடையாளம் காணுமிடம் நுட்பமானது. எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனை தன்னுடன் இணைத்துக்கொள்கிறான். அவன் எவர் என்று அவனுக்குத்தெரியும். அந்தமாதிரியான பல நயனகர்ப்ப மகன்கள் அவனுக்கு இருக்கவும்கூடும். பெரிய தோள்கள் கொண்ட விசோகன் ஒரு அபூர்வமான மல்லன். பீமனைச்சூழ்ந்து அவனைப்போன்றவர்கள் திரள்வது இயல்பானது. அவர்கள் அங்கேதான் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கமுடியும். அவர்களின் இடம் அதுதான் இவர்கள் எல்லாருமே பீமசேனரின் முகங்கள்தானே

ராஜ்