Monday, November 12, 2018

யானைகள்





அன்புள்ள ஜெ

போரிலீடுபடும் யானைகளைப்பற்றிய அத்தியாயத்தில் யானை பேருருவம் அடைந்தால்கூட அதன் வால் குழவியின் வாலாகவே நீடிக்கிறது என்ற வரி ஆழமானது. அந்த வாலை குழந்தைவாலாக வைத்திருப்பதன் வழியாக யானையின் ஒரு சிறுபகுதி குழந்தையாகவே நீடிக்கிறது. அது என்ன செய்தாலும் கொஞ்சம் குழந்தைத்தனம் வந்துவிடுகிறது. அந்த வர்ணனையின் அழகு அந்தப்போர்க்களத்தின் வீரியத்தின் நடுவிலும் ஆழமான ஒரு அனுபவமாக இருந்தது. யானைகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். யானையின் உடல்மொழி. யானை போரிடும்போது கொஞ்சம் வளைந்து குறுகுவதை கண்ணாலேயே பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது. அதற்குமேலும் யானை பற்றிச் சொல்ல அத்தனை மிச்சமிருக்கிறது என்பது ஆச்சரியமானது

செந்தில்