Sunday, November 11, 2018

ஓவியம்




அன்புள்ள ஜெயமோகன்,

சஞ்சயன் தெய்வங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்கிறான். வெறும்பெயர் மட்டுமல்ல. அவற்றை குவாலிஃபை செய்யும் ஒருசில சொற்களும் உள்ளன. தனித்தனியாக அவற்றை எடுத்து பார்த்து அவற்றின் இயல்புகளைப்புரிந்துகொள்ளலாம்தான். ஆனால் அந்தப்பகுதியின் தேவையே அது உருவாக்கும் perplexion தான். என்ன நிகழ்கிறது என்று தெரியாத ஒரு பெரிய மலைப்பு. ஆயிரக்கணக்கான ஓவியங்கள் உள்ள மியூசியங்களுக்குள் செல்லும்போது எனக்கு அந்தவகையான ஒரு மயக்கம் வந்திருக்கிறது. எதையுமே பார்க்கவில்லை என்று தோன்றும். அனைத்தும் ஒன்றுடனொன்று கலந்துவிடும். ஆனால் கடைசியில் ஒட்டுமொத்தமாக ஒரு மிகப்பெரிய ஓவியத்தை பார்த்த பிரமிப்பும் வந்துவிடும். பார்த்துமுடிக்கமுடியாத ஓவியம் அது. அந்த உணர்வை அளித்தன இந்த இரண்டு அத்தியாயங்களும்


சந்திரசேகர்